» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலைமையம்

புதன் 16, மே 2018 8:25:47 PM (IST)

வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தைப் பொறுத்தவரை கன மழை பெய்யக் கூடும். தலைநகர் சென்னை யில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக மாயனூர், துறையூர் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

makkalமே 17, 2018 - 11:59:27 AM | Posted IP 162.1*****

welcome

சாமான்யன்மே 17, 2018 - 09:02:34 AM | Posted IP 172.6*****

7 செமீ or 7 மிமீ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

New Shape Tailors

Joseph Marketing





Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory