» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவிரி விவகாரத்தில் திமுக சார்பில் நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு

புதன் 16, மே 2018 3:52:52 PM (IST)

காவிரி விவகாரத்தில் நாளை நடக்க இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக தள்ளி வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீட்டிற்கான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, மே 14ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், மத்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங், திட்ட வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தார். இதுதொடர்பாக இன்று மீண்டும் விசாரணை வந்த வழக்கில், காவிரி அமைப்பின் தலைமையிடத்தை டெல்லியில் அமைக்க வேண்டும் என்பது, உள்ளிட்ட பல முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நாளையும் நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், நாளை காவிரி விவகாரம் தொடர்பாக நடக்க இருந்த திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள குறிப்பில், காவிரி விவகாரத்தில் நாளையும் விசாரணை நடக்கவுள்ளதால், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

CSC Computer Education

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals



Thoothukudi Business Directory