» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.1 சதவீதம் தேர்ச்சி : 97 சதவீதம் தேர்ச்சியுடன் விருதுநகர் முதலிடம்!!

புதன் 16, மே 2018 10:36:25 AM (IST)

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 97 சதவீதம் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின. இதில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்களின் பெற்றோர் செல்பேசி எண்களுக்கு அனுப்பி வைக்கும் வசதியை தேர்வுத் துறை செய்துள்ளது. பள்ளிகளுக்கும் மாணவர்கள் நேரில் சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், மணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் - 94.1 சதவீதம் மற்றும் மாணவர்கள் - 87.7 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 1,907 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.  அதிகபட்சமாக விருதுநகர் - 97 சதவீதம் (முதலிடம்), ஈரோடு - 96.3 சதவீதம் (இரண்டாமிடம்), திருப்பூர் - 96.1 சதவீதம் (மூன்றாமிடம்) பெற்றுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals


New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory