» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குலசேகரம் காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை : பொய் வழக்கை வாபஸ் பெற கோரிக்கை

செவ்வாய் 15, மே 2018 7:24:52 PM (IST)

பொய் வழக்கை திரும்ப பெற கோரி குலசேகரத்தில் காவல்நிலையத்தை எம்எல்ஏ.,தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அனுமதி இன்றி தொடர்ந்து கற்கள் கொண்டு செல்லும் நிலையில், இந்த வாகனங்களை பொதுமக்கள் மற்றும் தமிழக லாரி ஓட்டுநர்கள் அவ்வப்போது சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.  நேற்று வெண்டலிகோடு பகுதியில் இரு வாகனங்களை சிறைபிடித்து குலசேகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீஸார் சிறைபிடித்த பொதுமக்கள் 10 பேர் மீதுவழக்கு பதிவு செய்ததாகவும் கைது செய்தவர்களை விடுவிக்க கேட்டும், தங்கள் மீது பொய் வழக்கை வாபஸ் பெற கோரி குலசேகரம் காவல் நிலையத்தை பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ., மனோதங்கராஜ் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்ட க்காரர்களுடன் போலீஸார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொது மக்களின் இந்த முற்றுகையினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape Tailors

Joseph Marketing

crescentopticals
Thoothukudi Business Directory