» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கண் கலங்கி நன்றி தெரிவித்த நீட் தேர்வு மாணவி : மதுரையில் கார் டிரைவர் செய்த உதவி..!

ஞாயிறு 6, மே 2018 7:04:17 PM (IST)

மதுரையில் ஹால்டிக்கெட் எடுத்துவர மறந்த மாணவியை காரில் அழைத்துச் சென்று தேர்வு எழுத உதவிய கார் டிரைவருக்கு அங்கிருந்த பெற்றோர்கள் கண் கலங்கி பாராட்டு தெரிவித்தனர். 

மதுரையில் உள்ள மையங்களில் பெரும்பாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே தேர்வு எழதுகிறார்கள். பல்வேறு சிரமங்களுடன் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு மாணவ - மாணவியர் தங்களது பெற்றோர்களுடன் வந்து சேர்ந்தனர். இந்நிலையில் மதுரை மேலூர் சூரக்குண்டையைச் சேர்ந்த அழகர்சாமி-தனலெட்சுமி என்ற தம்பதியின் மகள் டயானா நீட் தேர்வு எழுத அம்மா தனலெட்சுமியுடன் மதுரை பசுமலை செளராஸ்ட்ரா கல்லூரிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தேர்வு நுழைவு சீட்டை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துள்ளார். இதனால் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படாத டயானா கல்லூரி வளாகத்தில் அழுதுகொண்டிறிந்தார். இதை பார்த்த டிரைவர் மணி என்பவர் அந்த மாணவிக்கு உதவி செய்யும் விதமாக அவரின் காரில் ஏற்றிக்கொண்டு டயானாவின் வீட்டிற்கு சென்று நுழைவு சீட்டை எடுத்து காரிலேயே அழைத்துவந்து தேர்வு எழுதும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்த்தார். மேலூர் சூரக்குண்டு பசுமலையில் இருந்து 35 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் ஆனால் 35 நிமிடத்தில் அவரை காரில் கூட்டிச் சென்று நுழைவுச் சீட்டை எடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  இதனால் மாணவி டயானா டிரைவர் மணிக்கு கண்ணீருடன் நன்றி சொன்னார். 

டயானாவின் அம்மா  தனலெட்சுமி டிரைவருக்கு காசு கொடுத்துள்ளார் அதை கூட வாங்க மறுத்து மணி உதவி செய்தார். இதனால் அங்கிருந்த பெற்றோர்கள் கைகுலுக்கி பாரட்டினர். எந்த பலனும் எதிர்பார்க்காமல் காலத்தால் செய்த இவர் செய்த உதவியை பாராட்டலாம்..!


மக்கள் கருத்து

Ashok kumarமே 11, 2018 - 03:52:19 PM | Posted IP 59.99*****

இது போன்ற மனிதர்களால் தான் மழை பெய்கிறது நன்றி தோழா தலை வணங்குகிறேன்

ராஜ்குமார்மே 8, 2018 - 04:38:43 PM | Posted IP 172.6*****

வாழ்த்துக்கள் ஜி.

நியாஸ்மே 8, 2018 - 12:46:06 PM | Posted IP 172.6*****

வாழ்த்துகள் மணி

சீனிவாசன்மே 8, 2018 - 10:31:05 AM | Posted IP 162.1*****

நல்ல மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதற்கு மணி ஒரு சாட்சி

தமிழன்மே 7, 2018 - 01:06:45 PM | Posted IP 141.1*****

தலை வாங்குகிறோம் மணி

சாமிமே 7, 2018 - 12:30:27 PM | Posted IP 141.1*****

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.

என்றும் அன்புடன்...மே 7, 2018 - 09:19:26 AM | Posted IP 172.6*****

மனிதாபிமானம் தொடர வாழ்த்துக்கள் பாஸ்

Anandமே 7, 2018 - 04:31:07 AM | Posted IP 172.6*****

Thanks Mani

ROYALமே 6, 2018 - 08:01:41 PM | Posted IP 172.6*****

Valthukal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsAnbu Communications

Joseph Marketing

CSC Computer EducationBlack Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory