» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியாவில் இலங்கை தமிழர் அரசியல் பெரிய வி‌ஷயம் அல்ல : முதல்வர் விக்னேஷ்வரன் பேட்டி

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 2:07:46 PM (IST)இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌ஷயம் அல்ல என இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் கூறினார்.

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்துள்ளார்.நெல்லை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இன்று காலை திருநெல்வேலி வந்தார். அவருக்கு நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர் மணி பட்டர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.பின்னர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌ஷயம் அல்ல.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு மேம்பட இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இலங்கை தமிழர்களுக்கு இன்னும் கூடுதல் உதவிகள் செய்ய கூடிய வாய்ப்பு அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார். பின்னர் அவர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார்.


மக்கள் கருத்து

தமிழன்Apr 17, 2018 - 04:18:16 PM | Posted IP 162.1*****

திரு விக்னேஸ்வரன் அவர்கள் சொன்னது இங்குள்ள அரசியல் வாதிகளுக்கு கேட்டுச்சா.....இனியாவது இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் பண்ணாமல் இருங்கள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam

New Shape Tailors


Anbu Communications

Joseph Marketing


CSC Computer EducationThoothukudi Business Directory