» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேராசிரியை விவகாரம் : ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு

திங்கள் 16, ஏப்ரல் 2018 7:39:52 PM (IST)

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லுாரியில் வேலை பார்க்கும் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை உயர்அதிகாரிகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் ஆடியோ வாட்ஸ்ஆப்பில் வேகமாக பரவி அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் தற்போது வீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட அறிவிப்பில்,பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும்.இதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமான்யன்Apr 16, 2018 - 10:59:17 PM | Posted IP 172.6*****

இரண்டு பெற்றோரும் இரண்டு மாணவிய பிரதிநிதிகளும் தங்கள் வழக்கறிஞர்களோடு இந்த விசாரணை கமிசனில் இணைக்கப்பட வேண்டும்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

Joseph Marketing




New Shape Tailors




Thoothukudi Business Directory