» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரும் 23ம் தேதி மாவட்டதலைநகரங்களில் மனிதசங்கிலி போராட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு

திங்கள் 16, ஏப்ரல் 2018 7:29:32 PM (IST)

காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்தியஅரசு உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென தமழகத்தில் எதிர்கட்சிகள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்தி யாளர்களை சந்தித்தார், அவர்கூறும் போது, அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டுள்ளதாகவும் அதன்படி  காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 23-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றார். 

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து கருத்து கூறிய அவர், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ இதனை விசாரிக்க வேண்டும் என்றார். மேலும் காவிரி விவகாரம் குறித்து பிரதமரை சந்திக்க, 9 கட்சி தலைவர்களும் நேரம் கேட்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரி வித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Joseph Marketing




Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals



Thoothukudi Business Directory