» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை; கர்நாடகாவின் தூதுவர்: ரஜினி மீது பாரதிராஜா கடும் விமர்சனம்

திங்கள் 16, ஏப்ரல் 2018 5:40:31 PM (IST)

தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள் என ரஜினிகாந்தை பாரதிராஜா கடும் விமர்சனம் செய்து உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மீது இயக்குநர் பாரதிராஜாகடுமையாக விமர்சனம் செய்து கருத்து வெளியிட்டு உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்தின் சமூக வலைதள பதிவுக்கு, இயக்குநர் பாரதிராஜா பதில். அளித்து உள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?; அறவழியில் போராடியவர்கள் வன்முறையாளர்களா?  தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது. ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது. 

இலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்? தமிழர்களுள் ரஜினிகாந்த் சிண்டு  முடிய வேண்டாம். நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் போராடினீர்களா? மீத்தேன் பற்றி வாய் திறந்தீர்களா? இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா?: படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினி போன்றோரை சந்தித்ததே இல்லை. காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது, வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள். உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது என கடும் விமர்சனம் செய்து உள்ளார்.


மக்கள் கருத்து

சாமிApr 18, 2018 - 11:38:10 AM | Posted IP 141.1*****

அன்று எத்தனை பெண்கள் வாய்ப்புக்காக சீரழிந்தனர் உன்னால்

RajiniApr 18, 2018 - 10:23:18 AM | Posted IP 202.1*****

Definitely, East or west my home is the best.

kamalahasanApr 17, 2018 - 11:43:16 AM | Posted IP 172.6*****

வாழ்த்துக்கள் பாரதிராஜா அவர்களை ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors


Joseph Marketing




Thoothukudi Business Directory