» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் தினகரன் புதிய கட்சி தொடங்கியது ஏன்? டி.ராஜேந்தர் கேள்வி

திங்கள் 19, மார்ச் 2018 12:08:52 PM (IST)

தினகரன் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றால், ஏன் வேறு பெயரில் கட்சி தொடங்க வேண்டும் என டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். 

லட்சிய திமுக நிறுவனர் தலைவர் டி.ராஜேந்தர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கூறியிருப்பதை வரவேற்கிறேன். குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அனைவரும் போராட வேண்டும். தமிழகத்தில் நடைபெறுவது பாஜகவின் மாற்று அரசு. 

எதற்கும் விடை காணாத அரசு. அதிமுகதான் இப்படியென்றால், எதையும் தட்டிக் கேட்க இயலாமல் இருக்கிறது எதிர்க்கட்சி. கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்தால், இப்படி நடக்குமா? அவரது திமுக வேறு. ஸ்டாலினின் திமுக வேறு. தினகரன் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றால், ஏன் வேறு பெயரில் கட்சி தொடங்க வேண்டும். இதன் பின்னணியில் சதி இருக்கிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

Johnson's EngineersThoothukudi Business Directory