» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை; பாமகவால் மட்டுமே நல்லாட்சி தர முடியும்: ராமதாஸ் பேச்சு

திங்கள் 19, மார்ச் 2018 11:32:25 AM (IST)

ரஜினி, கமல்ஹாசனுக்கு துளியும் அரசியல் அறிவு இல்லை; நல்ல ஆட்சியினை பா.ம.க. வினால் மட்டுமே தர முடியும்.  என காஞ்சீபுரத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.

காஞ்சீபுரத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் உச்சக்கட்ட ஊழல் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் ஒவ்வொரு ஊழல் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே முழுமையாக மக்களிடம் கொண்டு செல்கின்றது. தமிழக அரசின் ஊழல்கள் குறித்து கவர்னரிடம் பா.ம.க. சார்பில் இரண்டு முறை மனு அளிக்கப்பட்டது. அதனை உன்னிப்பாகப் படித்த கவர்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆந்திராவில் நேர்மையான ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் அவர்களால் மத்திய அரசினை தைரியமாக எதிர்க்க முடிகின்றது. ஆனால் தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதனால் மத்திய அரசினை எதிர்க்க முடியவில்லை. தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த ஆட்சி விரைவில் கவிழும். இந்தக் காஞ்சி மண்ணிலே பிறந்த அறிஞர் அண்ணா மதுவினால் வரும் பணம் அரசுக்கு தேவையில்லை என உறுதியாக இருந்தார் ஆனால் அவர் வழியிலே செல்வதாகக் கூறும் தி.மு.க.தான் தமிழகத்திற்கு மதுவினை அறிமுகப்படுத்தியது.

எம்.ஜி.ஆர். மதுக்கடைகளை அதிகப்படுத்தினார். ஜெயலலிதா அரசாங்கமே மதுவினை விற்கும் நிலைக்கு கொண்டு வந்தார், ஆனால் அறிஞர் அண்ணாவின் கொள்கையினை பா.ம.க. மட்டுமே கொண்டுள்ளது. குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். விஜயகாந்த் அரசியலில் இருந்து காணாமல் போய் விட்டார்.

ரஜினி, கமல் போன்றவர்கள் துளியும் அரசியல் அறிவு இல்லாமல் மக்கள் சேவையாற்றப் போவதாகக் கூறுகின்றனர். இவர்களால் எந்த மாற்றத்தினையும் கொண்டு வர முடியாது. தினகரன் ஹவாலா பணத்தில் சுற்றி வருகின்றார். இவர்களால் மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை. நல்ல ஆட்சியினை பா.ம.க. வினால் மட்டுமே தர முடியும். காவிரி விவகாரத்தில் ராஜினாமா என்பது தேவையில்லை, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph MarketingThoothukudi Business Directory