» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமிதாப் நலம்பெற வாழ்த்து,குரங்கணி தீ விபத்துக்கு மெளனம் : ரஜினி மீது நெட்டிசன்கள் பாய்ச்சல்

செவ்வாய் 13, மார்ச் 2018 7:39:00 PM (IST)

தேனி மாவட்டம் குரங்கணியில் நிகழ்ந்த தீவிபத்திற்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினிகாந்த் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, இமயமலைக்கு ஆன்மீகச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.அங்கு பாபா குகையில் தியானம், குதிரை சவாரி என ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு, 11 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.பிரதமர் மோடி, மத்திய, மாநில அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தங்ஸ் ஆஃப் இந்துஸ்தான் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்தார்.இதுகுறித்து, அமிதாப் உடல்நலம் பெற பிரார்த்திப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார். இதற்கு மட்டும் ரஜினிக்கு மனமுள்ளது.ஆனால் குரங்கணி சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்க நேரமில்லை, மனமில்லை என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Joseph Marketing

New Shape Tailors




Thoothukudi Business Directory