» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

செவ்வாய் 13, மார்ச் 2018 1:31:22 PM (IST)

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலைகொண்டுள்ளது. இது லட்சத்தீவை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும். தென்தமிழகம், குமரி, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலில் காற்றின் வேகம் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார். தெற்கு வங்கக் கடலில் கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals



New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing




Thoothukudi Business Directory