» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீரப்பன்-ஆட்டோ சங்கர் படத்தையும் சட்டசபையில் திறப்பார்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

புதன் 14, பிப்ரவரி 2018 4:28:14 PM (IST)

சட்டசபையில் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு பி.பி.அக்ர காரத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார். இந்த பொது கூட்டத்தில் காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினையை கண்டு கொள்வதில்லை அரசு பஸ் போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அறிக்கை வழங்கி உள்ளார். இதை அவர் கொஞ்சம் கவனிப்பார் என நினைக்கிறேன் அதில் உள்ள ஊழலை ஒழித்தாலே போதும் பஸ் கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம்.

போக்குவரத்துதுறையில் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்துதான் பதவி உயர்வு வாங்கி உள்ளனர். பொறுப்புக்கு வரும் போதே லஞ்சம் கொடுத்து வருபவர்கள் தொடர்ந்து எந்த துறையாக இருந்தாலும் ஊழல்தானே செய்வார்கள்? நமது முதல் அமைச்சருக்கே 14 தனியார் பஸ்கள் உள்ளன. இதேபோல் இன்னும் எத்தனை அமைச்சர்களுக்கு சொந்தமாக பஸ்கள் ஓடுகிறதோ... இல்லையென்று அவர்கள் மறுக்கட்டும் பார்க்கலாம். தைரியம் இருந்தால் வழக்குகள் வட போடட்டும். ஜெயலலிதா என் மீது போட்ட வழக்கை கூட தைரியமாக துணிச்சலாக சந்தித்தவன் நான்.

அம்மா ஸ்கூட்டர் என்ற திட்டத்தை தொடங்கி பகல் கொள்ளையடிக்கிறார்கள். 25 ஆயிரம் ரூபாய் மானியம்ம கொடுப்பதாக அறிவித்துள்ளனர். 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டரை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி மானியம் தருவதாக கூறி கொள்ளையடிக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் திருச்செங்கோடு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி போட்டு போட்டியிட்ட அவருக்கு நானே ஓட்டு போட்டுள்ளேன். அவரது ஊழல் ஆட்சியை இப்போது எதிர்க்கிறேன். இந்த ஊழல் ஆட்சி இனியும் தொடரக் கூடாது வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

உச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என அறிவித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்தை சட்ட சபையில் திறந்து இருப்பது ஏற்புடையது அல்ல. இது சரி என்றால் இனி சட்டசபையில் ரவுடிகள் படத்தையும் திறப்பார்கள். சந்தன கடத்தல் வீரப்பன், பல பேரை கொன்று குவித்த ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள். இதற்கு வாய்ப்பு இருக்கிறது என நம்பலாம். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க ஆதரவு தெரிவித்த எங்கள் கட்சி எம்.எல்.ஏ. விஜயதரணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது காங்கிரஸ் தலைமையகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.


மக்கள் கருத்து

சேகர்Feb 15, 2018 - 11:16:28 AM | Posted IP 45.25*****

கோணவாயா. உன் தாத்தா பெரிய புடுங்க்கி. நீ சின்ன புடுங்க்கி போடா

சாமிFeb 14, 2018 - 11:13:24 PM | Posted IP 117.2*****

மோசமான கொள்ளையன் - சிதம்பரம் - நீ - உனது ஜால்றா கூட்டம்

MAKKALFeb 14, 2018 - 05:07:20 PM | Posted IP 59.99*****

கேன கூ உன் செத்த படத்தையும் திறப்போம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer EducationThoothukudi Business Directory