» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் பெரியார் மண்ணல்ல; பெரியாழ்வார் மண் - தமிழிசை பேச்சு!!

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 12:45:17 PM (IST)

தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண். அண்ணா வளர்த்த தமிழல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பேசினார்.

பா.ஜனதா கட்சியின் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ம் தேதி மிகப்பெரிய அளவில் தீ விபத்து நடந்துள்ளது. இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இந்து கோவில்களில் தீ விபத்து சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.

ஆன்மிக அரசியலை முன்னெடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். ஆனால் ஆன்மிக அரசியலுக்கு முதல் முதலில் வித்திட்டது பா.ஜ.க. தான். தமிழகத்திலும் பா.ஜ.க. ஆன்மிக அரசியலை நடத்தி வருகிறது. காவி அரசியலும், ஆன்மிக அரசியலும் ஒன்றுதான். தேசிய கொடியில் காவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தமிழகத்திலும் காவி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண். அண்ணா வளர்த்த தமிழல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ்.

மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது மக்களுக்கான ஒரு நல்ல திட்டத்தை கூட ப.சிதம்பரம் கொடுக்கவில்லை. மோடியின் அரசை குறை சொல்ல அவருக்கு உரிமை இல்லை. அதுபோல் பட்ஜெட் பற்றி ராகுல்காந்தி குறை சொல்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியில் தேர்ச்சி பெறட்டும். அதன் பின்பு மோடியை குறை சொல்லலாம். அவரது கட்சியிலேயே அவர் தேர்ச்சி பெறாமல் இருக்கிறார்.தமிழகத்தில் தான் அதிகப்படியான நகரங்களை, ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அதுபோல் மதுரை மருத்துவ கல்லூரிக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான மருத்துவத்தை ஏழை மக்கள் பெற முடியும். இதுபோன்ற மக்களுக்கான நல்ல பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வேலை இல்லா திண்டாட்டம் இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் குறைந்துள்ளது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. கட்சிக்கே தலைவராக முடியாத மு.க.ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆவார்? இவ்வாறு அவர் பேசினார். 


மக்கள் கருத்து

maharajaFeb 14, 2018 - 01:35:59 PM | Posted IP 103.2*****

அருமை

மக்கள்Feb 13, 2018 - 02:11:00 PM | Posted IP 157.5*****

மோடி ஆட்சியை கவிழ்க்க இவங்க ஒருவரே போதும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education

crescentopticals


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory