» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழா : திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஞாயிறு 11, பிப்ரவரி 2018 6:59:11 PM (IST)

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை வைப்பதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,மக்கள் வழங்கிய ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வருமா னத்திற்கு அதிகமாக பலமடங்கு சொத்து குவித்த ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்ப டத்தை, மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பாகத் திகழும் சட்டமன்றத்தில், பேரவைத்தலைவர் திறந்து வைப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை முன்னின்று நடத்தும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, பேய் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாஸ்திரம், என்பதன் நடமாடும் நினைவுச்சின்னம் என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள். தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்ற காரணத்தால் மட்டுமே அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லையே தவிர, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளே என்று அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அப்படியே அட்சரம் பிசகாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. கர்நாடக உயர்நீதிமன்றம் கூட அம்மையார் ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை என்று கூறவில்லை. அந்த தீர்ப்பின் 915 ஆவது பக்கத்தில், ஒரு தப்புக்கணக்கைப் போட்டு, கூட்டல் பிழைசெய்து, அதன்மூலம் கூட அம்மையார் ஜெயலலிதா 8.12 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளார் என்றே நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டி இருந்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பேரவைத்தலைவர், இன்றைக்கு, அவைக்கு ஒவ்வொத ஊழல் குற்ற வாளியின் படத்தை திறந்து வைக்கப் போகிறார் என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழுக்கு.எனவே பேரவை தலைவர் உடனே ஜெய லலிதா படத்திறப்பு முயற்சியை கைவிட வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என தமது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சுபாஷ் சந்திர போஸ்Feb 13, 2018 - 06:00:25 PM | Posted IP 122.1*****

ஒரு இருப்பு பெண்மணி . படம் திறப்பது ஒன்னும் தப்பு இல்லை

makkalFeb 12, 2018 - 12:19:14 PM | Posted IP 59.99*****

போடா டுபுக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals

Joseph Marketing


CSC Computer EducationThoothukudi Business Directory