» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய விமர்சனம்: வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சனி 13, ஜனவரி 2018 11:51:15 AM (IST)

ஆண்டாள் குறித்து தவறாக விமர்சனம் செய்ததாக கூறி கவிஞர் வைரமுத்து மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாக கூறப்படுகிறது. 

வெளிநாட்டு ஆய்வாளர் வெளியிட்ட ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தையும் மேடையில் வைரமுத்து கூறியதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்கில் இருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு எதிராக வைணவர்களும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால், ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தன்னுடைய பேச்சுக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த நிலையில், இந்து முன்னணி சார்பாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர இந்து முன்னணி செயலாளர் சூரி என்பவர் வைரமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து தெற்கு ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வைரமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD








Johnson's Engineers


crescentopticals



Thoothukudi Business Directory