» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சனி 13, ஜனவரி 2018 11:26:16 AM (IST)

கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அநாகரீகத்திற்கும், வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை. சிலர் தங்களின் சுயநலனுக்காக வைரமுத்து மீது அராஜகமான கருத்துகளை தெரிவிக்கின்றனர் என்று ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு வாரமாக வைரமுத்து குறித்த அவதூறான கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றனர். தான் ஆண்டாள் பற்றி புண்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் கூறவில்லை என்று வைரமுத்து விளக்கம் அளித்த பின்னரும் அவர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

"தமிழை ஆண்டாள்" என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க தனியார் நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக விளக்கம் அளித்து "யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers



New Shape Tailors





selvam aqua

Universal Tiles Bazar





Thoothukudi Business Directory