» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சைக்கிள், ஸ்கூட்டியில் மோதி ஆற்றுக்குள் விழுந்த கார் : எட்டு பேர் படுகாயம்

சனி 13, ஜனவரி 2018 10:18:28 AM (IST)



செங்கோட்டையில் சைக்கிள், ஸ்கூட்டியில் மோதி பாலத்தின் தடுப்பை உடைத்து ஆற்றுக்குள் விழுந்த கார் விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரள மாநிலம் போயத்தோடு நேஷனல் நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்தினர். பின்னர்அவர்கள் காரில் கேரளாவிற்குப் புறப்பட்டுச் சென்றனர். கார் செங்கோட்டை குண்டாறு பாலம் பகுதியில் சென்ற போது அவ்வழியே சென்ற சைக்கிள், ஸ்கூட்டி மீது மோதியது. இதன் பின்னர் பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு குண்டாற்றுக்குள் விழுந்தது. 

இந்த விபத்தில் காரை ஓட்டிய  ஷாகஸ் (27), காரில் இருந்த சப்னா (35), முபீனா (28), அல்அமின் (9), அப்சல் (34), சைக்கிளில் சென்ற செங்கோட்டையைச் சேர்ந்த மாரியப்பன் (60), ஸ்கூட்டியில் சென்ற கொட்டாகுளத்தைச் சேர்ந்த பொன்னையா (62), அவரது மனைவி கல்யாணி (57) ஆகிய 8பேர் படுகாயமடைந்தனர்.இச்சம்பவம் பற்றி செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 

இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தேவிபிரியா மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு பொன்னையா மற்றும் அவரது மனைவியை தென்காசி மருத்துவமனையிலும், மற்றவர்களை செங்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும்; இச்சம்பவம் பற்றி செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



Thoothukudi Business Directory