» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா உயர்நீதிமன்ற கிளையில் மனு

செவ்வாய் 14, நவம்பர் 2017 8:12:26 PM (IST)

தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளார்.

சமீபத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கூலி தொழிலாளி இசக்கி முத்து தன் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்ச ம்ப வத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர், எஸ்பி,மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கண்டிக்கும் வகையில் கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துாரி அளித்த புகாரின் பேரில் கார்ட்டூ னிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி பாலா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளார். மனுவில் கந்துவட்டியால் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை கார்டூனில் சித்தரித்ததால் வழக்கு தொடரப்ப ட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்Nov 14, 2017 - 08:19:49 PM | Posted IP 59.96*****

கந்துவட்டி காரர்களை பிடிக்கணும் சொன்னா, ஏண்டா அப்பாவி கார்ட்டூனிஸ்ட் பாலாவை பிடிக்கிறீங்க ??? தமிழகத்தில் ஏராளமான கந்துவட்டிக்காரர்களை பிடிச்சு உள்ளே போடுங்கடா... போங்கப்பா உங்க சட்டமும் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam

selvam aqua

New Shape Tailors

Sterlite Industries (I) Ltd



CSC Computer Education


Johnson's Engineers



Thoothukudi Business Directory