» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் : துரைமுருகன் குற்றச்சாட்டு

செவ்வாய் 14, நவம்பர் 2017 1:38:06 PM (IST)

விழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் இறுதி தொடங்கி வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.இதில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் கனமழை பெய்தது.இந்த மழையால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது.இந்நிலையில் மழை வெள்ளபாதிப்பின்போது தமிழக அரசு சாியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்,மழை வெள்ள பாதிப்பின்போது, மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்தை அரசு கூட்டியிருக்க வேண்டும், அதைவிடுத்து,பல்வேறு விழாக்க ளில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என்றார். மேலும் தற்போது தமிழகத்தில் கொலை,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்தி ருப்பதாகவும் அதை தடுக்க  மாவட்ட எஸ்பிக்கள் கூட்டத்தை கூட்டியிருந்தால், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கும் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals




Friends Track CALL TAXI & CAB (P) LTD




Johnson's Engineers






Thoothukudi Business Directory