» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவறு செய்பவர்களை விட மாட்டோம் : மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

செவ்வாய் 14, நவம்பர் 2017 11:36:38 AM (IST)

தவறு செய்பவர்களை விட மாட்டோம் என நாகர்கோவிலில் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் இன்று மத்தியஅமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்கிறது. வருமான வரித்துறை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். அவர்கள் எங்கு சோதனை நடத்த வேண்டும் என்றாலும் திட்டமிட்டு செயல்படுவார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை. பாரதிய ஜனதா கட்சி தவறுக்கு துணை போகாது. தவறு செய்பவர்களை தண்டிக்காமலும் விடாது. தவறு செய்ய தூண்ட மாட்டோம். தவறு செய்வோரையும் விடமாட்டோம்.

அதிமுக.வை வெளியில் இருந்து யாரும் வந்து அழிக்க வேண்டியது இல்லை. அக்கட்சியை அதிமுக.வினரே அழித்து விடுவார்கள்.ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்திக்காததற்கு மருத்துவமனை சூழ்நிலையே காரணமாகும். தமிழக த்தில் நடைபெறும் விபத்துகளுக்கு மது போதையே காரணமாகும். விபத்துக்களால் ஏற்படும் 75 சதவீத மரணங்களுக்கு மதுவே காரணம் என்று தெரிய வந்துள்ளது. எனவே மது பழக்கத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

rasuNov 15, 2017 - 09:06:17 AM | Posted IP 8.37.*****

Unka thalaivar son,,,,, மங்காவை Yaana Seya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

CSC Computer Education

New Shape Tailors

Nalam Pasumaiyagam


selvam aqua

Sterlite Industries (I) Ltd

Johnson's Engineers

Thoothukudi Business Directory