» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கபீர் புரஸ்கார் விருது, அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு

புதன் 11, அக்டோபர் 2017 8:41:31 PM (IST)

தமிழக முதல்வரால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருது மற்றும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்துக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதி்க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமுதாயம் மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருது ஆண்டு தோறும், முதல்வரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த விருது மூவருக்கு ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 காசோலை மற்றும் தகுதியுரையுடன் வழங்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்பு மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் பணியின் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில், இப்பதக்கத்தை பெற தகுதியுடையவர்களாவர். இவ்விருதானது, ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற ஜாதி, இன, வகுப்பைச் சேர்ந்தவர்களையோ, அல்லது அவர்கள் உடமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ, அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரியும் போது, அவர் உடல் மற்றும் மன வலிமையை பாராட்டி வழங்கப்படுகிறது.

அண்ணா பதக்கம்

அதே போல், வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கமும் குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படுகிறது. இந்த விருதில் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலை, பதக்கம், தகுதியுரை அடங்கும். வீர தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கம் பெறலாம். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் இப்பதக்கம் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

வரும் 2018-ம் ஆண்டு வழங்கப்பட உள்ள கபீர் புரஸ்கார் விருது மற்றும் அண்ணா பதக்கத்துக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், அவை தொடர்பான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் மூலம், அரசு முதன்மை செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை- 600009 என்ற முகவரிக்கு டிசம்பர் 15-ம் தேதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். உரிய காலத்துக்குள் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

selvam aqua



New Shape Tailors


Johnson's Engineers




Thoothukudi Business Directory