» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்கிறது : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

புதன் 11, அக்டோபர் 2017 1:32:37 PM (IST)

மதுபானங்களின் விலையை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சென்னையில் இன்று முதல்வர் ஈபிஎஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், வீரமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள்,அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக அரசுக்கு வருவாயை எவ்வாறு உயர்த்துவது என்றும் கலந்தாலோசிக்கபட்டதாகவும் அப்போது மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.இதில் 180 மி.லி. கொண்ட மதுபான விலை ரூ.12 உயர்த்தவும் மற்றும் மதுபான விலையை உயர்த்தி கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

2016 தேர்தலில் ஜெயலலிதா வென்ற பின் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடப்பட்டது.மேலும் டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் நேரம் மதியம் 12 மணியாக்கப்பட்டது.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஏராளமான கடைகள் மூடப்பட்டது குறிப்பிட த்தக்கது.


மக்கள் கருத்து

குடிமகன்Oct 11, 2017 - 03:04:33 PM | Posted IP 171.4*****

நீங்கள் இலவசமாக எப்போ ? குவோட்டர் ரேஷன் கடையில் கொடுக்கப்போறீங்க? அப்படி நீங்க தந்தால் பெண்கள் சந்தோசம் அடைவார்கள் ? வாரத்துக்கு ஒரு குவாட்டர் தான் நீங்க தரணும் ? எங்கள்மாதிரி ரெகுலர் குடிகாரர்கள் திருத்துவும் உங்களால் முடியும் நம்பி உங்களுக்கு வோட்டு போடுவார்கள் நாங்களும் உங்களை என்றும் மறக்கமாட்டடோம் ? செய்விர்களா ? நீங்கள் செய்விர்களா ? தமிழ்நாடு அரசு பாரில் குடிப்போர் பேரவை தூத்துக்குடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers





crescentopticals




New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory