» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியாததால் கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்ய பயணி: காஞ்சீபுரத்தில பரபரப்பு

புதன் 11, அக்டோபர் 2017 10:42:52 AM (IST)ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியாததால் காஞ்சீபுரம் கோயில் வாசலில் ரஷ்ய பயணி ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்வது வழக்கம். நேற்றும் கோயிலில் வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கோயில் வாசலில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார்.

தரையில் அமர்ந்து தனது தொப்பியை வைத்து பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த அவரை அங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் "நான் இந்தியாவை சுற்றிப்பார்க்க வேண்டும். என்னிடம் பணம் இல்லை. பண உதவி செய்யுங்கள்” என சைகை மூலம் தெரிவித்தார். இதனை பார்த்த சில பக்தர்கள் அவரது தொப்பியில் பணம் போட்டனர். இதுகுறித்து பக்தர்கள் சிலர் பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோயிலுக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த எவிக்மி என்பதும், அவரது ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை என்பதும் எனவே அவர் பணத்தேவைக்காக கோயில் வாசலில் பிச்சை எடுத்ததும் தெரியவந்தது. எவிக்மியின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை போலீசார் சரிபார்த்தனர். அவரிடம் அதுதொடர்பான முறையான ஆவணங்கள் இருந்தது. பின்பு போலீசார் அவரிடம் இதுபோன்று பிச்சை எடுக்கக்கூடாது என அறிவுரை கூறி சிறிதளவு பணம் கொடுத்தனர். தொடர்ந்து அவரை சென்னைக்கு ரயிலில் ஏற்றி விட்டு அங்குள்ள தூதரக அதிகாரிகளை சந்திக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர். கோயில் வாசலில் ரஷ்ய பயணி பிச்சை எடுத்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து

உண்மைOct 11, 2017 - 02:11:01 PM | Posted IP 122.1*****

இங்குள்ள மூடர்களுக்கும் வரப்போகும் நிலை இதுதான்! ஜெய் ஸ்ரீ ராம்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals
Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory