» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் பத்திரிகையாளர் மீது தரக்குறைவான விமர்சனம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

புதன் 9, ஆகஸ்ட் 2017 6:49:40 PM (IST)

பெண் பத்திரிகையாளரை சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக விமர்சித்தவர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் வசிப்பவர் தன்யா ராஜேந்திரன். இவர் இணையதள பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக உள்ளார். இவர் நடிகர் விஜய் நடித்துள்ள சுறா படத்தை பார்த்தபோது, இடைவேளையில் வெளியே வந்துவிட்டதாகவும், ஷாருக்கான் நடித்துள்ள இந்தி படத்தை பார்த்தபோது இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்திருந்தார்.

இதனால் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படத்துடன் பலர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுபற்றி அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில், பெண் பத்திரிகையாளரை விமர்சித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது : ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமையுள்ள ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை. பேச்சுரிமையின் குரல்வளையை நெறிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தளத் தாக்குதல் மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இதுபோன்ற அச்சுறுதல்களை விடுப்போருக்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி முறையாக பிரயோகிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

unmaiAug 13, 2017 - 01:12:22 PM | Posted IP 82.19*****

soban babu niyabgam iruka

உண்மைAug 11, 2017 - 04:09:01 PM | Posted IP 59.99*****

அய்யா சுடாலின் பாத்திமா பாபு ஞாபகம் இருக்கா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals





New Shape Tailors


Joseph Marketing




Thoothukudi Business Directory