» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்துாரில் அருட்திரு பங்காருஅடிகளாரிடம் முதலமைச்சர் பழனிச்சாமி ஆசி பெற்றார்

புதன் 9, ஆகஸ்ட் 2017 5:08:12 PM (IST)




மேல்மருவத்துார் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆன்மிககுரு அருட்திரு பங்காரு அடிகளாரிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆசி பெற்றனர்.

இன்று (9 ம் தேதி) காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் சித்தர்பீடம் வந்த பாேது அவரை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், மற்றும் கோ.ப. செந்தில்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,கடம்பூர் ராஜூ, கருப்பண்ணன், டாக்டர் சரோஜா,ராஜலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் முதலமைச்சர் ஆதிபராசக்தி அம்மன் கருவறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு 108 தமிழ் மந்திரங்கள் முழங்க குங்கும அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இதில் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர்.



தொடர்ந்து அவர்கள் புற்று மண்டபம்,நாகதேவதை சன்னிதி மற்றும் கன்னி கோவிலில் வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அவர்கள் அருட்கூடம் அழைத்து செல்லப்பட்டு அங்கு அருட்திரு பங்காரு அடிகளாரிடம் முதலமை ச்சர் பழனிச்சாமி மற்றும் பிற அமைச்சர்கள் ஆசி பெற்றனர்.தொடர்ந்து தனியறையில் அமர்ந்து பங்காரு அடிகளாருடன் முதலமைச்சர் பேசினார். தொடர்ந்து அனைவரும் சித்தர்பீடத்தின் எதிரே உள்ள அதர்வண பத்ரகாளி சன்னதிக்கு சென்று வழிபட்டு விட்டு 12.15 மணியளவில் சித்தர்பீடத்திலிருந்து கிளம்பி சென்றனர்.

மதியம் 1 மணியளவில் தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக் கண்ணுவும், நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர்கள் செங் கோட்டையன்,திண்டுக்கல் சீனிவாசன்,ஆகியோர் சித்தர்பீடம் வந்து ஆதி பராசக்தி அம்மனை வழிபட்டு அருட்திரு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றுச்சென்றனர்.


மக்கள் கருத்து

சக்தி சிவாAug 11, 2017 - 05:11:46 PM | Posted IP 168.2*****

ஓம்சக்தி. இனிமேல் நல்லதே நடக்க வேண்டும் என்று அம்மாவை வேண்டிக்கொள்வோம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Sterlite Industries (I) Ltd




Johnson's Engineers

Universal Tiles Bazar

CSC Computer Education

Nalam Pasumaiyagam

selvam aqua



Thoothukudi Business Directory