» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா ராஜினாமா

வெள்ளி 19, மே 2017 5:11:47 PM (IST)

தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா தன் பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியுடன் இணைந்து, மத்திய- மாநில அரசுகள் இடையிலான முக்கியமான விஷயங்களை பவன் ரெய்னா கவனித்து வந்தார். சமீபத்தில், இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில், அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பவன் ரெய்னா பெயரும் அடிபட்டது.

இதையடுத்து டெல்லி போலீஸார் பவன் ரெய்னாவிடம் விசாரித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் டெல்லி ஆலோசர் பவன் ரெய்னா கடந்த 12-ம் தேதி இவர் ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். தற்போது அந்தக் கடிதம் ஏற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



selvam aqua

Johnson's Engineers

Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education



Universal Tiles Bazar


Pop Up Here



Thoothukudi Business Directory