» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விரைவில் தமிழக சட்டப்பேரவை கூட்டப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

வெள்ளி 19, மே 2017 1:43:17 PM (IST)

விரைவில் சட்டப்பேரவை கூட்டப்படும் என ஊட்டியில் முதல்வர் ஈபிஎஸ் கூறினார்.

ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.இதில் முதல்வர் கூறும் போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாமல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைக்கப் பட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறிவந்தன. 

இதன் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும். நீலகிரியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊட்டி பேருந்து நிலையத்தை அதிநவீன பேருந்து நிலையமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி பேருந்து நிலையத்தை நவீனமாக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல உதகை தாவரவியல் பூங்க மேம்படுத்த ஜெயலலிதா 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த திட்டம் செயல் படுத்தப்படும்.ஜெயலலிதா அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் தற்போதுள்ள அரசு செயல்படுத்தும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers


New Shape Tailors


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar


Sterlite Industries (I) Ltd


selvam aqua



Thoothukudi Business Directory