» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்தாம்வகுப்பு தேர்வில் தோற்றவர்களுக்கு மத்தியஅமைச்சர் பொன்னார் அறிவுரை

வெள்ளி 19, மே 2017 1:04:55 PM (IST)

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மத்தியஅமைச்சர் பொன்னார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த 9 இலட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 94.4 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் விருதுநகர் மாவட்டம் 98.5 சதவீதம் வெற்றி பெற்று முதலிடத்தையும்; கன்னியாகுமரி மவாட்டம் 98.17 சதவீதம் வெற்றி பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. 10ம் வகுப்பு தேர்வில் 94.4 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. 

அதே நேரத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் சமூக அக்கறையுடன் மேற்படிப்பை மேற்கொண்டு மென்மேலும் வெற்றிகளை தேடித்தரவும் தோல்வியடைந்துள்ள 5.6 சதவீதம் மாணவர்கள் தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்று மனம் தளராமல் தொடர்ந்து பயின்று வெற்றி பெறவும் அன்னை ஆதி பராசக்தி அருள்புரிய பிரார்த்திக்கின்றேன் என அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors

crescentopticals


Johnson's Engineers



Thoothukudi Business Directory