» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு

வெள்ளி 19, மே 2017 12:17:08 PM (IST)

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

சட்ட விரோதமாக ஒருதரப்பிடம் இருந்து மற்றொரு தரப்புக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரினை அடுத்து, சிபிஐ வழக்குப் பதிந்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியது.

இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, ஐஎன்ஸ் நிறுவன அன்னிய முதலீட்டுக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகக் கூறி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னதாக, கார்த்தி சிதம்பரம் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று காலை லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNalam Pasumaiyagam

Johnson's Engineers


Universal Tiles Bazar

New Shape Tailors


selvam aqua

CSC Computer Education

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory