» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்தாம் வகுப்பு தேர்வு.. தமிழகத்தில் 94.4%பேர் தேர்ச்சி - வழக்கம்போல் மாணவிகளே அதிகம்

வெள்ளி 19, மே 2017 10:49:41 AM (IST)

10-ம் வகுப்பு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. ஆக  அதிகரித்துள்ளது

சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிட்டார். ரேங்க் முறை இல்லாத 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல்முறையாக வெளியிடப்பட்டது. எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர், சிறைக் கைதிகள் 224 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர்.

2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. கடந்த 2015-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.9% ஆக இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு தேர்ச்சி பெற்றோர் 0.8% கூடுதலாகும்.

வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 96.2%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.5%. மாணவர்களை விட மாணவிகள் 3.7% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து

samsunமே 19, 2017 - 03:57:16 PM | Posted IP 61.1.*****

SUPER

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory