» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

25 ரூபாய் கட்டணம் : கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி

வெள்ளி 21, ஏப்ரல் 2017 8:51:57 PM (IST)




சென்னை கிண்டி கவர்னர் மாளிகை பொதுமக்கள் பார்வையிடும் சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி பகுதியில் தமிழக கவர்னர் மாளிகை அமைந்துள்ளது.சுமார் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகையில் 6718 மரங்களும், 3.5 ஏக்கர் பரப்பளவில் காய்கறி தோட்டமும் உள்ளது. 698 புள்ளிமான்கள், 254 கலைமான்கள், எண்ணற்ற குரங்குகள், 80க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு கூடுகட்டி வாழ்கின்றன. இவ்வளவு பசுமையான கவர்னர் மாளிகை சுற்றிப்பார்க்கும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை கவர்னர் மாளிகையை பார்வையிடலாம் என்று கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

அதன்படி www.tnrajbhavan.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்த 20 பேர் இன்று கவர்னர் மாளிகையை சுற்றுப்பார்த்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நாளும் 20 பேர் என்று பேட்டரி கார் மூலம் சுற்றிப்பார்க்க உள்ளனர். கவர்னர் மாளிகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ஒரு நபர் 25 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டையை சமர்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொண்டவுடன் சுற்றுப்பார்க்க ஒதுக்கப் பட்டுள்ள தேதி செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும்.

மேலும் கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க வரும்போது செல்போன், கேமரா கொண்டு வரக்கூடாது என்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரை மே மாதம் கடைசிவரை பொதுமக்கள் கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க இணையம் மூலமாக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

Johnson's Engineers

Black Forest Cakes


New Shape Tailors


Pop Up Here



selvam aqua

CSC Computer Education




Thoothukudi Business Directory