» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக இரு அணிகள் மீதும் மத்திய அரசு நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 11:26:26 AM (IST)

அதிமுகவின் இரு அணியினர் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வருமானவரித் துறை சோதனையும், அதிமுகவுக்குள் குழப்பமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கைகோத்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதிமுகவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அரிதாரம் பூசி அரங்கேறும் நாடகங்கள் இதைத் தான் உலகத்துக்கு வெளிப்படுத்துகின்றன.

சேகர் ரெட்டி மட்டும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுகிறார். ஆனால், சேகர் ரெட்டியைத் தாண்டி விசாரணை அடுத்தகட்டமாக உள்ள அதிமுக அமைச்சர்கள் பக்கமோ, மணல் கொள்ளைக்கு துணை நின்றவர்கள் பக்கமோ செல்வதற்குச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதா என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது. தற்போது இரு அணியாக இருப்பவர்கள்தான் இணைய உள்ளனர். அதிமுகவின் இரு அணியினருமே ஜெயலலிதாவின் மரணத்தில் நியாயம் கிடைக்கப் போராடுகிறோம்; தர்ம யுத்தம் நடத்துகிறோம் என்றெல்லாம் பகட்டாகப் பேசுவது பகல் வேஷம்.

எனவே, வருமானவரித் துறை சோதனைகள் அனைத்திலும் கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இரு அணிகளிலும் உள்ள அதிமுக அமைச்சர்கள் மீதும், அவர்களின் ஊழல்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும், முதல்வர் மீதும் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான மேல் நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

saamyApr 21, 2017 - 11:33:46 AM | Posted IP 117.2*****

அப்படி பார்த்தால் - கழக குடும்பம் - மொத்தமாக உள்ளே போக வேண்டிவரும் - உங்கள் சொத்தை வைத்து உலகத்துக்கே படஜெட் போடலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Johnson's Engineers



crescentopticals

New Shape Tailors








Thoothukudi Business Directory