» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா-சசிகலா பேசிய வீடியோவை விரைவில் வெளியிடுவேன்: திவாகரனின் மகன் மிரட்டல்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 10:10:49 AM (IST)

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிய வீடியோவை உரையாடலை விரைவில் வெளியிடுவேன் என்று சசிகலா சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இந்த கருத்தையே முன்வைத்தனர்.

இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது முகநூல் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு கருத்தை எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கொலை பழி சுமத்தியும் அம்மா சிகிச்சை படத்தை வெளியிடவில்லை. காரணம், பச்சை கவுன் உடையில், அம்மாவை எதிரிகள் பார்க்கக்கூடாது என்பதே ஒரே காரணம். இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல். சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், ஓ.பி.எஸ்., கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மாவை பிணப்பெட்டியில் வைத்து ஓட்டு கேட்கிறார்.

உண்மை வலிமையானது. ஒரு நாள் புரட்சித்தலைவி அம்மாவும், தியாக தலைவி சின்னம்மா(சசிகலா) இருவரும் மருத்துவமனையில் நடத்திய உரையாடல் வீடியோ வெளிவந்தால்...? பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்...? அந்த நாள் மிக விரைவில். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். ஜெயானந்த் திவாகரன் கடந்த 7-ம் தேதி முகநூல் பக்கத்தில் இதை எழுதியுள்ளார். தற்போது மீண்டும் அந்த கருத்தை எழுதியுள்ளார். இதன்மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோவை ஜெயானந்த் விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.


மக்கள் கருத்து

nanbanApr 21, 2017 - 03:34:04 PM | Posted IP 105.2*****

இந்த ஸ்டேட்மென்ட வைத்தே இவன் மாட்டிக்க போகிறான்.பொறுத்து இருந்து பாருங்கள் மக்களே.

சாமிApr 21, 2017 - 01:00:33 PM | Posted IP 117.2*****

உண்மை இதுதான் - எதிர்பாராதவிதமாக சசிகலா அவர்கள் (பிஜேபி உபகாரம்) சிறை செல்ல நேர்ந்தது - அம்மா அவர்களின் வழக்கின் தீர்ப்பு முன்பேயே பிஜேபி தலைமைக்கு தெரியும் - ஆகவே திரு ஓபிஎஸ் வெளியே இழுக்கப்பட்டார் - இதுதான் உண்மை - சசிகலா அவர்களின் நிலைமையை தெரிந்து - திரு ஓபிஎஸ் முதுகில் குத்தி விட்டார் - இது தவறு என்று காலம் அவருக்கு உணர்த்தும்

உண்மைApr 21, 2017 - 11:04:45 AM | Posted IP 117.2*****

இவ்வளவு நாள் இவர் எங்கே போயிருந்தார்?

உண்மைApr 21, 2017 - 11:03:36 AM | Posted IP 117.2*****

இவ்வளவு நாள் இவர் எங்கே போயிருந்தார்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

Nalam Pasumaiyagam


CSC Computer Education


Universal Tiles BazarJohnson's Engineers

Sterlite Industries (I) Ltd

selvam aquaThoothukudi Business Directory