» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு : மே 4ம் தேதி விசாரணை

வியாழன் 20, ஏப்ரல் 2017 1:49:51 PM (IST)

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு மே 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கு காணொலி காட்சி மூலம் விசாரிக்கக்கோரி சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த வழக்குகளை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இந்நிலையில் இவ்வழக்கு வரும் மே 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் காணொலி காட்சி மூலம் விசாரிக்கக்கோரி சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சசிகலாவின் உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு காணொலிகாட்சி மூலம் விசாரித்தால் கையெழுத்திட முடியாது என வாதிட்டது.


மக்கள் கருத்து

மக்கள்Apr 20, 2017 - 01:59:19 PM | Posted IP 59.93*****

இனிமேல் டூட்டி ஆன்லைன் சசிகலா ஜெயலலிதா இருக்கும் போது எப்படி இருந்தாரோ அந்த பழைய போட்டோவை போடவும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Pop Up Here

New Shape Tailors

Nalam Pasumaiyagam


Johnson's Engineers


selvam aqua

Universal Tiles Bazar


Black Forest Cakes



Thoothukudi Business Directory