» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ் புத்தாண்டு : ரூ15 லட்சம் நல உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்

வெள்ளி 14, ஏப்ரல் 2017 5:22:10 PM (IST)



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ் புத்தாண்டு விழாவையொட்டி ரூ15லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் கேவிளம்பி தமிழ் புத்தாண்டு கொன்டாடப்பட்டது. அதிகாலை 3மணிக்கு மங்கல இசையுடன் கருவறையில் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9மணிக்கு சித்தர் பீடம் வருகை தந்த ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு காஞ்சிபுரம் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

தமிழ்புத்தாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை வகித்தார். 15 ஜோடிகளுக்கு இலவச திருமணங்களையும், 6 தம்பதியர்களுக்கு மணி விழாக்களையும் அருள்திரு அடிகளார் நடத்தி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவிகள், ஏழைபெண்களுக்கு இட்லி கொப்பறைகள், எரிவயு அடுப்புக்கள், பாத்திரங்கள், விவசாய கருவிகள்,தையல் இயந்திரங்கள், சலைவைப்பெட்டிகள், ஏழை மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை உட்பட ரூ.15லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அருள்திரு அடிகளார் வழங்கினார்.

முன்னதாக, வியாழக்கிழமை மாலை இயற்கை சீற்றம் தணியவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்விபூஜை  நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜி.கருணாநிதி, ரயில்வே அதிகாரி செந்தமிழ்செல்வன், ஏ.கே.வெங்கிடசாமி, சாய்பிரசாத், மூத்த வழக்கறிஞர்கள் ரகுவீர், கிருஷ்ணன் மற்றும் செவ்வாடை பக்தர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மக்கள் கருத்து

அம்மா திருவடித் தொண்டர்Apr 14, 2017 - 07:32:09 PM | Posted IP 157.4*****

ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா.

Senthamarai NApr 14, 2017 - 06:30:46 PM | Posted IP 2.50.*****

Please bless me to help others

Senthamarai NApr 14, 2017 - 06:29:06 PM | Posted IP 2.50.*****

OmSakthi Thaye Thanks Ma.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers


CSC Computer Education

Universal Tiles Bazar

New Shape Tailors



Nalam Pasumaiyagam

Black Forest Cakes


selvam aqua

Pop Up Here



Thoothukudi Business Directory