» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகம், வீட்டில் சோதனை முடிந்தது: ஆவணங்கள் வெளியாகின
சனி 8, ஏப்ரல் 2017 5:02:54 PM (IST)
விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், குவாரியில் நடந்த சோதனை நேற்றிரவு முடிந்தது. இதில் கோடிக்கணக்கான பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவுக்குள் வருமான வரைத்துறையின் சார்பில் ஒரு அறிக்கை தயார் செய்து தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்கப்படும் என தெரிகிறது.

அதில் ரூ.126 கோடி வரை விநியோகம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் புகார் கொடுத்தனர். தினகரன் அணியினர் பணம் கொடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பணம் கொடுத்த விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பங்கு முக்கியமாக இருந்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன.
அதைத் தொடர்ந்து விஜயபாஸ்கரின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களா, எழும்பூரில் உள்ள சகோதரி வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள உதவியாளர் நைனார் வீடு, நந்தனம், தி.நகரில் உள்ள உறவினர் வீடு, சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் 4வது மாடியில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உட்பட 5 வீடுகள், எழும்பூர் கென்னட் லேனில் உள்ள நியூ விஜயா லாட்ஜில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் தங்கியுள்ள 3 அறைகள் என்று நகரில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் எழும்பூர் லாட்ஜில் ரூ.120 கோடி பணம் விநியோகம் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மற்றும் உதவியாளர், உறவினர்கள், எம்எல்ஏ விடுதிகளில் ரூ.6 கோடி வரை சிக்கியதாகவும் கூறப்படுகிறது. சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் நேற்று நடந்த சோதனை நள்ளிரவு வரை நடந்தது. அதேபோல விஜயபாஸ்கருக்கு நெருக்கமான எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமியின் சாலிகிராமம் வீட்டில் இன்று வரை சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை அடுத்த சிட்லப்பாக்கம் காந்தி தெருவில் உள்ள முன்னாள் எம்பியும் தற்போது காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக(அம்மா) அணி மாவட்டச் செயலாளருமான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டன. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சரின் வீடு, இலுப்பையூரில் உள்ள வீடு, குவாரி, அலுவலகம், நாமக்கல்லில் உள்ள காண்ட்ராக்டர் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இதில் கோடிக்கணக்கான பணம், கோடிக்கான மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. எவ்வளவு சிக்கியது என்ற விவரத்தை அதிகாரிகள் கணக்கீட்டு வருகின்றனர். அதன் பிறகு எவ்வளவு சிக்கியது என்பதை ஐடி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவுக்குள் வருமான வரைத்துறையின் சார்பில் ஒரு அறிக்கை தயார் செய்து தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து தேர்தல் ஆணையம் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தேன்: நிர்மலா தேவி
சனி 21, ஏப்ரல் 2018 5:42:10 PM (IST)

கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது
சனி 21, ஏப்ரல் 2018 5:10:14 PM (IST)

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை சட்ட திருத்தம்: சரத்குமார் வரவேற்பு
சனி 21, ஏப்ரல் 2018 4:48:03 PM (IST)

காவிரியில் துரோகம் இழைக்கும் வஞ்சக கூட்டம் நடுங்க தமிழர்கள் அணி திரள்வோம்: வைகோ அழைப்பு!
சனி 21, ஏப்ரல் 2018 4:27:42 PM (IST)

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சனி 21, ஏப்ரல் 2018 3:23:28 PM (IST)

பிரச்னை செய்வதற்கு ஆணையர் அலுவலகத்துக்கு வரவில்லை : நடிகர் சிலம்பரசன் பேட்டி
சனி 21, ஏப்ரல் 2018 1:49:14 PM (IST)
