» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெ. சொத்துகளை அரசுடமையாக்க கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 12, ஜனவரி 2017 5:16:26 PM (IST)

ஜெயலலிதா சொத்துகளை அரசுடமையாக்க கோரிய  மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையை சேர்ந்தவர் கே.கே.ரமேஷ், பொதுநல வழக்குகளுக்கான மையத்தின் நிர்வாக அறங்காவலரான இவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிச.5ல் திடீரென காலமானார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தனது அசையும், அசையா சொத்துக்களின் விபரங்களை அபிடவிட்டாக தாக்கல் செய்திருந்தார். அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை. எனவே, அவரது சொத்துக்களை கண்டறிந்து அரசின் கட்டுப்பாட்டில் ெகாண்டுவர வேண்டியது அவசியம். 

திமுக தலைவர் கருணாநிதி, தனது காலத்திற்கு பின் தனது கோபாலபுரம் வீட்டை பொதுமக்கள் பயனடையும் வகையில் மருத்துவமனையாக பயன்படுத்த வேண்டுமென உயில் எழுதி வைத்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சொத்துக்கள் மீதான வழக்கில், அவரின் சொத்துக்களை பராமரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. தற்போது எம்ஜிஆரின் சொத்துக்கள் அனைத்தும் ஓய்வு பெற்ற நீதிபதியின் பராமரிப்பில் உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமித்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். 

பின்னர் இந்த சொத்துக்களை அரசுடமையாக்கி அவற்றை நிர்வகித்து, பராமரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமிக்க வேண்டும். அவர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, தனிநபரின் சொத்து சம்பந்தமான விஷயத்தை பொதுநல மனுவாக தாக்கல் செய்ய முடியாது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



CSC Computer Education


Universal Tiles Bazar

selvam aqua

New Shape Tailors

Johnson's Engineers

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory