» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சி உதயமாகும்போது தை திருநாளை புத்தாண்டாக கொண்டாடுவோம்: ஸ்டாலின் பேச்சு

வியாழன் 12, ஜனவரி 2017 4:54:24 PM (IST)



திமுக ஆட்சி உதயமாகும்போது தை திருநாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட வழி வகுப்போம் என காஞ்சிபுரத்தில் நடந்த பொங்கல் விழாவில், மு.க.ஸ்டாலின் பேசினார்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் குன்றத்தூர் ஒன்றியம் கோவூரில் சுந்தரேஸ்வரர் கோயில் அருகே சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் பேரக்குழந்தைகளுடன்  கலந்து கொண்டார். அவரை சுந்தரேஸ்வரர் கோயில் குருக்கள்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதையடுத்து கரும்பு, வாழை, கொடி தோரணங்களுடன் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு குடும்பத்துடன் வந்த மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து மேடைக்கு முன்பு காய்கறிகள், பழங்கள் வைத்து படையல் போடப்பட்டி ருந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த 5 பொங்கல் பானைகளில் மு.க.ஸ்டாலினும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தண்ணீர் ஊற்றி, பச்சரிசி, வெல்லம், முந்திரி போட்டு நெருப்பு பற்ற வைத்தனர். இதைத்தொடர்ந்து மேடையில் குடும்பத்துடன் அமர்ந்தபடி பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், பரதநாட்டியம், கோலாட்டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை மு.க.ஸ்டாலின் ரசித்தார். தொடர்ந்து பாடகர் வேல்முருகனின் கிராமிய கலைநிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து பொங்கலை அனைவருக்கும் வழங்கினார். 

ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமத்துவப் பொங்கல் கொண்டாட வேண்டும் என தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியதன் பேரில் திமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து சாதி, மதம் கடந்து ஒன்றுகூடி தை திருநாளை தமிழ்புத்தாண்டு பொங்கல் விழாவாக கொண்டாடி வருகிறோம். பொங்கல் தினத்தை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடவேண்டும் என்று திமுக தலைவர் சட்ட வடிவம் கொண்டு வந்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அது அப்படியே இருக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி தமிழகத்தில் உதயமாகும்போது சட்டவடிவம் கொண்டு வந்து தை திருநாளை தமிழ்ப்புத்தாண்டாக மாற்றி அனைவரும் கொண்டாட வழிவகுப்போம். 

தமிழன், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எங்கு ஒரு சிறு ஆபத்து ஏற்பட்டாலும் அதை பாதுகாக்க வேண்டிய இடத்தில் என்றைக்கும் திமுக இருக்கிறது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அதேசமயம் சமத்துவப் பொங்கல் கொண்டாடி நான் உங்களுக்கு வாழ்த்து கூறினாலும் ஒருபக்கம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலை இருக்கிறது. இந்த நிலை மாற இங்கு ஆளுகின்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி தகுந்த பரிகாரம் செய்யவேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here


Universal Tiles Bazar



Johnson's Engineers


Black Forest Cakes


selvam aqua

CSC Computer Education

Nalam Pasumaiyagam

New Shape Tailors



Thoothukudi Business Directory