» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் பாமக ஆதரவு அளிக்கும் : ராமதாஸ் அறிவிப்பு

வியாழன் 12, ஜனவரி 2017 3:39:49 PM (IST)

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் பாமக ஆதரிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும், இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில், மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வராமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. உச்ச நீதிமன்றமும் ஜல்லிக்கட்டு தொடர்பாக உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டது. இந்நிலையில், ஏற்கனவே பொங்கி எழுந்துள்ள இளைஞர்கள், தங்களது போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தடையை மீறி ஜல்லிக்கட்டை யார் நடத்தினாலும் அதனை பாமக ஆதரிக்கும் என்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் நடத்தும் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு விஷயத்தில் தன்னெழுச்சியாக உருவாகியுள்ள மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாது என்றும் ஜல்லிக்கட்டு நடக்காமல் இருப்பதற்கு மத்திய அரசே காரணம் என்றும் குற்றம் ராமாஸ் சாட்டியுள்ளார். தமிழக அரசும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing





Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals



Thoothukudi Business Directory