» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு

வியாழன் 12, ஜனவரி 2017 2:26:02 PM (IST)

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஞாயிறன்று பெரிய அளவில் பேரணி நடைபெற்றது. பிற ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors

crescentopticals



Johnson's Engineers


Friends Track CALL TAXI & CAB (P) LTD







Thoothukudi Business Directory