» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழர்களின் கலாசாரத்திற்கு எதிராக தாக்குதல்: பொறுத்துக்கொள்ள முடியுமா? சிம்பு ஆவேசம்

புதன் 11, ஜனவரி 2017 5:50:04 PM (IST)

தமிழர்களின் கலாசாரத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு இன்று தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது: அதில், "தமிழை தாய்மொழியாக கொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழில் ஐந்தாம் வகுப்பு வரை 99 மதிப்பெண்கள் எடுத்தேன். நான் முதலில் தமிழன், பிறகுதான் நான் இந்தியன். தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது. 

தமிழர்களுக்கு உணர்வு இல்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசும் அறுகதை எனக்கு உள்ளது. இன்று கூட நான் பேசாவிட்டால் என்றுதான் பேசுவது? இதுவரை வெளியில் அடித்தீர்கள். இப்போது என் வீட்டுக்குள்ளேயே வந்து எனது கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியுமா? நான் போராட்டம் நடத்தினால் அரசியலுக்கு வருவதாக கூறிவிடுவார்கள். நான் அரசியல்வாதி கிடையாது. நான் ஒரு நடிகர்தான். இவ்வாறு அவர் கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

CSC Computer Education

Johnson's Engineers


selvam aqua


Black Forest Cakes

Panchai Dairy

Nalam Pasumaiyagam




New Shape Tailors



Thoothukudi Business Directory