» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிருஷ்ணா நதியில் போதிய தண்ணீர் இல்லை: சென்னையில் சந்திரபாபுநாயுடு பேட்டி

புதன் 11, ஜனவரி 2017 8:34:32 AM (IST)

கிருஷ்ணா நதியில் போதிய தண்ணீர் இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறினார். 

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணா நதியில் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லை. குறைந்த அளவே உள்ளது. தண்ணீர் எவ்வளவு உள்ளதோ அதற்கு தகுந்தாற்போல சென்னைக்கு தண்ணீர் வழங்கப்படும். மக்கள் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும். ஆந்திராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

பண பரிவர்த்தனை 35 சதவீதம் வரை டிஜிட்டல் மயமாகி உள்ளது. இது ஓரிரு மாதங்களில் 50–ல் இருந்து 60 சதவீதம் உயரும். பணமில்லா பரிவர்த்தனையை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மத்திய–மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும். ஆந்திராவில் கைரேகை மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. தற்போது ‘ஸ்மார்ட்’ செல்போன்களில் பண பரிவர்த்தனைகள் செய்யலாம். இதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Panchai Dairy



Johnson's Engineers

Black Forest Cakes

CSC Computer Education


Universal Tiles Bazar



selvam aqua




Thoothukudi Business Directory