» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெருமைக்குரிய நாடார் இனத்திடம் பாடம் கற்க வேண்டும் : பாமக தலைவர் ராமதாஸ் பேச்சு

வெள்ளி 6, ஜனவரி 2017 6:44:51 PM (IST)




இந்தியாவில் பெருமைக்குரிய சமுதாயமான நாடார் இனத்திடம் மற்றவர்கள் பாடம் கற்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார்.

சி.பி.எஸ்.இ 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்திய கருத்துகளை நீக்குவதற்கு முதல் குரல் எழுப்பிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு நாடார் சங்கங்கள் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு நாடார் பேரவை மாநில இளைஞரணி தலைவர் ஜாக்குவார் தங்கம் தலைமை தாங்கினார். தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம், நாசா விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், பாரதீய கல்சுரல் தலைமை பொது மேலாளர் சஞ்சய் ஜெய்ஷ்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாடார் சமுதாயம் தமிழகத்தில், இந்தியாவில் பெருமைக்குரிய சமுதாயம். அவர்கள் இல்லாத துறையே இல்லை. அவர்களுடைய மூலதனம் தமிழகத்தில் உழைப்பை பற்றி சொல்லி கொடுத்தவர்கள் நாடார் சமுதாயத்தினர். காலை தொடங்கி இரவு 12 மணி வரை உழைக்கிறார்கள். இந்த சமுதாயத்தை பார்த்து மற்ற சமுதாய மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாடார் சமுதாயத்தை பற்றி எழுதாமல் வரலாறு இருக்க முடியாது. அரசியல், சமூகம், ஆன்மிகம், கல்வி, வணிகம் என எல்லாவற்றிலும் முன்னேறி இருக்கிறார்கள்.

தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு நாடார் சமுதாயத்தினர். 15 ஆண்டுகளுக்கு முன்பு 13 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்தார்கள். தற்போது 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் நாடார் சமுதாயத்தினர் 50 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள். இதழியல் துறையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தினத்தந்தி, மாலை முரசு, ராணி போன்ற பத்திரிகைகளை தொடங்கினார். இதழியல் துறையை இவர்களால் தான் நடத்த முடியும் என்று இல்லாமல் நாங்கள் நாடார்கள் எங்களாலும் முடியும் என்று வெற்றிகரமாக இன்றளவும் நடத்தி வருகிறார்கள். எந்த சமுதாயமாக இருந்தாலும் எந்த பாகுபாடும் இல்லாமல் நான் போராடுவேன். தமிழகத்தை மாற்ற வேண்டும். முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தோடு பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., சசிகலா புஷ்பா எம்.பி., தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு, சிம்ம பேரவை தலைவர் ராவணன் ராமசாமி, சென்னை புறநகர் நாடார்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் மின்னல் ஸ்டீபன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார் உள்பட பல்வேறு நாடார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர் உள்பட பா.ம.க. முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன் வரவேற்று பேசினார். பா.ம.க. இளைஞர் அண துணை தலைவர் மாம்பலம் வினோத் நாடார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

athiJan 7, 2017 - 09:14:07 AM | Posted IP 117.2*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD






New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory