» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை!

புதன் 9, ஏப்ரல் 2025 8:36:13 PM (IST)



தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலைமையில், ஓபிசி அணி துணை தலைவர் விவேகம் ரமேஷ் முன்னிலையில் நிர்வாகிகள் டவுன் ஏஎஸ்பி மதனிடம் அளித்த மனுவில் "தூத்துக்குடி  மாநகராட்சி 26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரிய கீதா என்பவரின் மகன் ஜெர்சன் கஞ்சா வைத்திருந்ததாக மட்டக்கடை பகுதியில் வைத்து தனிப்படை காவல்துறையினரால் நேற்று இரவு கஞ்சா மற்றும் ஆயுதங்களுடனும், இருசக்கர வாகனத்துடனும் பிடிக்கப்பட்டு, வடபாகம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இந்த விபரம் அறிந்து அவருடைய தாயாரான மரிய கீதா தன்னுடைய ஆதரவானவர்களுடன் கூட்டமாக வந்து தன்னுடைய மகனை உடனே விடுதலை செய்ய வேண்டுமென பிரச்சனைகள் செய்ததோடு, அங்கிருந்த காவல்துறை வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக வடபாகம் காவல்நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை உடனே ஆய்வு செய்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மரிய கீதா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

VIJAY VIJAYApr 10, 2025 - 11:36:58 AM | Posted IP 104.2*****

இந்த உபிஸ்களின் உருட்டு அமோகம. புல்லரிக்குது

பிரபுApr 9, 2025 - 09:57:36 PM | Posted IP 172.7*****

இதே சம்பவம் பாஜக ஆளும் மாநிலங்களில் எங்கு நடந்தாலும் அந்த பாஜக நபரை கைது செய்ய விடமாட்டார்கள் திராவிட மாடல் ஆட்சி என்பதால் மட்டுமே உடனே கைது நடவடிக்கை சட்டப்படி நடைபெற்றிருக்கிறது தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே திராவிட நாயகன் திரு மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory