» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தொல்லியல் அகழாய்வு முறைகள் பயிற்சிப் பட்டறை
புதன் 9, ஏப்ரல் 2025 8:08:03 PM (IST)

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் "தொல்லியல் அகழாய்வு முறைகள்" என்ற ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய "தொல்லியல் அகழாய்வு முறைகள்" என்ற தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் புதிய கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் ச.மல்லிகா வரவேற்புரை நல்கினார். கல்லூரி முதல்வர் க.சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ச.பாபு நோக்கவுரை வழங்கினார். இப்பயிற்சிப் பட்டறையின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அலுவலர் பா.ஆசைத்தம்பி மாணவர்களுக்கு அகழாய்வு முறைகள் குறித்த செய்முறைப் பயிற்சியினை வழங்கினார். இந்நிகழ்வில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் கு.இராஜதுரை மற்றும் உயிரறிவியல் துறை பேராசிரியர் ரா.ரூபினா தனசுதா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியில் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரிதமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் செ.சிவகாமி சுந்தரி நன்றியுரை கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










