» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி மே 14ல் தொடக்கம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:18:44 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி மே 14ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1434-ம் ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 14.05.2025 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 1434-ம் ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 14.05.2025 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் காலை 10.00 மணிக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
ஜமாபந்தி அலுவலர் மற்றும் நடைபெறும் நாட்கள்
1. ஓட்டப்பிடாரம் வட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், 14.05.2025 முதல் 27.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
2. எட்டயபுரம் வட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தூத்துக்குடி 14.05.2025 முதல் 27.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
3. சாத்தான்குளம் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ) (இஸ்ரோ) திருச்செந்தூர். 14.05.2025 முதல் 20.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
4. விளாத்திகுளம் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ) சிப்காட், அல்லிக்குளம், தூத்துக்குடி. 14.05.2025 முதல் 27.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
5. கயத்தார் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ) நெடுஞ்சாலைகள், தூத்துக்குடி 14.05.2025 முதல் 27.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
6. திருச்செந்தூர் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ)-1 தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்)தூத்துக்குடி. 14.05.2025 முதல் 21.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
7. ஸ்ரீவைகுண்டம் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ)-11 தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்) தூத்துக்குடி. 14.05.2025 முதல் 22.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
8. தூத்துக்குடி வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் தூத்துக்குடி 14.05.2025 முதல் 21.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
9. ஏரல் வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் திருச்செந்தூர் 14.05.2025 முதல் 23.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
10. கோவில்பட்டி வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் கோவில்பட்டி 14.05.2025 முதல் 21.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்கள, அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










