» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க. கையெழுத்து வேட்டை!

திங்கள் 31, மார்ச் 2025 7:40:35 PM (IST)



நாசரேத் பகுதியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் நாடு பா.ஜ.க. தலைவர்அண்ணாமலை, ‘‘தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்த இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், பட்டிதொட்டியெல்லாம் மக்களிடம் இதை கொண்டு சென்று, ஒரு கோடி கையெழுத்து பெற்று, மே இறுதிக்குள் குடியரசுத் தலைவரை சந்தித்து தமிழக மக்களின் குரலாக அதை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், நாசரேத்தில் பாஜக சார்பில் கிளை தலைவர்கள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து பெறும் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கிழக்கு மண்டலம் ஞானராஜ் நகரில் வைத்து நடைபெற்ற கூட்டத்திற்கு மண்டல் தலைவர் சிவஜோதி பாண்டியன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் கனல் கே. ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மும்மொழிக். கொள்கையின் பயன்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினர். 

இக்கூட்டத்தில், 2026 தேர்தல் பணியாற்றுவது பற்றியும் மற்றும் மக்களிடையே மும்மொழி கொள்கை ஆதரவாக பணியாற்றுவது குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ஆழ்வை மண்டல கிளைத் தலைவர்கள் கார்த்திசன், பட்டுராஜன், ரவிச்சந்திரன், ராஜகோபால். ரங்கன், .முருகன் பிள்ளை, ராமதாஸ், மண்டல் நிர்வாகிகள் முருகப்பன் கோபால், மருது பாண்டியன் மற்றும் துணைத் தலைவர் மாரி தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக மண்டல பொதுச் செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மூக்குப்பீறி ஞானராஜ் நகரில் உள்ள பொதுமக்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் ஆழ்வார் திருநகரி கிழக்கு மண்டல நிர்வாகிகள் கையெழுத்து பெற்றனர்.


மக்கள் கருத்து

தாமரApr 1, 2025 - 09:48:26 AM | Posted IP 172.7*****

சீனாகாரன் தன் குழந்தைகளுக்கு நவீன தொழில்நுட்பம் சொல்லிக் கொடுக்கிறான். நம் டுபாக்கூர் அரசு சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இல்லாத ஹிந்திய திணித்து தங்கத்தமிழை அழிக்க துடிக்கிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory