» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கல்லூரி முன்பு மாணவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 11:16:46 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் உட்பட 3பேர் கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் நீக்கம் செய்துள்ள அந்த மாணவர் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் ஸ்ரீநாத், சந்தான செல்வம் ஆகிய 3பேர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,"கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடியதால் நீக்கம் செய்துவிட்டு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். கல்லூரியில் கல்விக் கட்டணத்தில் ஊழல் நடக்கிறது. ஏழை, எளிய கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கல்விக் கட்டணம் குறித்து அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். பெருந்தலைவர் காமராஜரின் கனவையும், நோக்கத்தையும் சிதைக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
அ.ஆனந்த கண்ணன்Feb 18, 2025 - 11:54:39 AM | Posted IP 172.7*****
கட்சிக்கு ஆள் பிடிக்க கல்லூரியை தேடும் கயவர்களை பெற்றோர்கள் இனம்கண்டு கொள்ள வேண்டும் கட்சிக்கு பின் சென்றால் பட்டதாரி ஆக முடியாது . கூலிதொழிலாளி
யாக தான் ஆக வேண்டும்!
StalinFeb 18, 2025 - 11:46:23 AM | Posted IP 162.1*****
கல்வி கட்டணம் என்று மாணவர்களிடம் பணம் பரித்து பண வேட்டை தடுத்து நிறுத்த போராடிய மாணவரை நீக்கம் செய்தது தவறு எனவே மாணவர்கள் போராட்டம் சரியானது
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)

கார்த்திFeb 19, 2025 - 12:27:31 PM | Posted IP 172.7*****